கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சிவாஜி நகரில் ஐஎம்ஏ குரூப் ஆப் கம்பெனி என்ற பெயரில் நிதி நிறுவனம் மற்றும் நகைக்கடை இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் முகமது மன்சூர் குறுகிய காலத்தில் அதிக வட்டி தருவதாகக் கூறி வாடிக்கையாளர்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்துள்ளார். சுமார் 400 கோடி வரை பணம் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஐஎம்ஏ நிறுவனத்தில் உரிமையாளர் கடந்த சில வாரங்களாக தலைமறைவானதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து 500-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் ஐஎம்ஏ நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

ima

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து வந்த பெங்களூரு காவல்துறை ஆணையர் ராகுல் குமார், வாடிக்கையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தார். இது குறித்து காவல்துறையினர் ஐஎம்ஏ நிறுவனத்தின் உரிமையாளர் முகமது மன்சூர் மீது பண மோசடி வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து தலைமறைவான உரிமையாளரை தேட காவல்துறை ஆணையர் ராகுல் குமார் தனிப்படை ஒன்றைஅமைத்துள்ளார்.