ADVERTISEMENT

சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் விமானம்; இழுத்து மூடப்பட்ட பள்ளிக்கூடங்கள்...

12:40 PM Feb 27, 2019 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

புல்வாமா தாக்குதலுக்கு பதில் தாக்குதலாக இந்தியா நேற்று பால்கோட் பகுதியில் தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்தது. அதனை தொடர்ந்து நேற்று மாலை மற்றும் இரவு நேரங்களில் பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில் இன்று காலை இந்திய பாகிஸ்தான் எல்லை பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. இந்திய எல்லைக்குள் புகுந்த இரண்டு பாகிஸ்தான் விமானங்கள் உள்ளே நுழைய முயற்சி செய்ததாகவும், பின்னர் இந்திய ராணுவ நடவடிக்கையால் அவை திரும்ப சென்றதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சமயத்தில் இந்திய வான்படையை சேர்ந்த என்.ஐ 17 ரக ஹெலிகாப்டர் விபத்துக்குளாகி அதில் இரண்டு இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த எப் 16 ரக விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது. அதில் பயணம் செய்த விமானி பார்ச்சூட் உதவியுடன் குதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதே பகுதியில் போர் அச்சுறுத்தல் காரணமாக ஸ்ரீ நகர், ஜம்மு, பதான்கோட் விமான நிலையங்கள் மூடப்பட்டு, பயணிகள் விமானம் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதி பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போர் தாக்குதல் எச்சரிக்கையால் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள விமான நிலையமும் மூடப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT