dsfdgdfg

புல்வாமா தாக்குதலுக்கு பதில் தாக்குதலாக இந்தியா நேற்று பால்கோட் பகுதியில் தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்தது. அதனை தொடர்ந்து நேற்று மாலை மற்றும் இரவு நேரங்களில் பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் இன்று காலை இந்திய பாகிஸ்தான் எல்லை பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. இந்திய எல்லைக்குள் புகுந்த இரண்டு பாகிஸ்தான் விமானங்கள் உள்ளே நுழைய முயற்சி செய்ததாகவும், பின்னர் இந்திய ராணுவ நடவடிக்கையால் அவை திரும்ப சென்றதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் இந்திய வான்படையை சேர்ந்த என்.ஐ 17 ரக ஹெலிகாப்டர் விபத்துக்குளாகி அதில் இரண்டு இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

ghghjgh

இந்த தாக்குதலில் இந்திய விமானப்படைவீரர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அபிநந்தன் திரும்ப வராததை இந்திய அரசும் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் அவர் இருப்பதுபோல வீடியோவும் பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலையைபூர்விகமாக கொண்ட அபிநந்தன் சென்னை சேலையூரை அடுத்த மாடம்பாக்கம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். தாம்பரத்தில் தனது பயிற்சியை முடித்த அவர், கடந்த 2004 கமிஷனில் உள்ள அவர் விமான படையில் பைலட்டாக பணிபுரிந்துள்ளார். பாகிஸ்தானில் மாட்டிக்கொண்டதாக கூறப்படும் இவரது நிலை தற்போது வரை தெரியாததால் அவரது குடும்பத்தினர் கவலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment