ADVERTISEMENT

இந்த பள்ளிகளில் பயிற்சி பெற்றால் ஆர்.டி.ஓ அலுவலக சோதனையின்றி உரிமம் - மத்திய அரசு அறிவிப்பு!

05:40 PM Jun 11, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

அரசின் அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளுக்கான விதிமுறைகளை மத்தியசாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளில் சிமுலேட்டர்கள் இருக்க வேண்டும். பிரத்தேயக ஓட்டுநர் பயிற்சி தடங்கல் இருக்க வேண்டும். மேலும் அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்களில், மோட்டார் வாகன சட்டம், 1988-ன் கீழ் தேவைப்படும் புத்தாக்க படிப்புகள் அங்கு நடத்தப்படவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளில் நடத்தப்படும் சோதனையில் வெற்றிபெறுவோர், ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கையில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் (ஆர்.டி.ஓ) நடைபெரும் சோதனையில் பங்கேற்க வேண்டியதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT