தமிழ் நடிகர்களில் அஜித்திடம் மட்டும்தான் விமானம் ஓட்டுவதற்கான உரிமம் உள்ளது என்பது நாம் அறிந்த விஷயம் அதேபோல் நடிகைகளில் ஒருவர் விமானம் ஓட்டுவதற்கான உரிமம் வைத்துள்ளார்.

Advertisment

ajith

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான இவர், காக்கிசட்டை, தில்லு முல்லு, டிக் டிக் டிக், சட்டம், தம்பிக்கு இந்த ஊரு போன்ற படங்களில் நடித்தவர். அமெரிக்காவைச் சேர்ந்த ரால்ஃப் என்பவரை திருமணம் செய்துகொண்ட அவர் அமெரிக்கா சென்றார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். அதன்பிறகு நடிக்க அழைத்தும் அவர் திரும்ப வரவில்லை. அதன்பிறகு அங்கேயே வாழ்ந்தார்.

வீட்டு நிர்வாகத்திலும், கணவரின் பிஸ்னஸிலும் பங்கெடுத்துக்கொண்ட அவர் விமானம் ஓட்ட கற்றுக்கொண்டார். தற்போது அவர் விமானம் ஓட்டும் உரிமமும் வைத்துள்ளார். தமிழ் நடிகர்களில் அஜித் மட்டுமே விமானம் ஓட்டும் உரிமம் வைத்துள்ளார், அதேபோல் நடிகைகளில் மாதவி மட்டுமே விமானம் ஓட்டும் உரிமம் வைத்துள்ளார்.