ADVERTISEMENT

லிபியாவில் உள்ள இந்தியர்கள் நாடு திரும்ப இந்திய அரசு சிறப்பு ஏற்பாடு!

03:30 PM Apr 22, 2019 | Anonymous (not verified)

லிபியாவில் கடந்த சில ஆண்டுகளாக அந்நாட்டு அரசு படைகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையேயான தாக்குதல் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் லிபியாவில் உள்ள ஆயில் கிணற்றை தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளதாகவும் , உச்சக்கட்டத்தில் தாக்குதல் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அரசு படைக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையேயான தாக்குதலில் அப்பாவி பொது மக்கள் ஆயிரக்கணக்கானோர் இறந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT



இதனால் லிபியாவில் வசிக்கும் இந்தியர்கள் அனைவரும் அரசு படைகள் மற்றும் தீவிரவாதிகள் தாக்குதல் நடக்கும் பகுதியிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் , உடனடியாக இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ள இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி திரு. ரவீஷ் குமார் (@Raveesh kumar) தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து இந்தியர்கள் அனைவரும் இந்தியா திரும்ப உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் , லிபியாவில் உள்ள இந்தியர்கள் உடனடியாக இந்திய தூதரகத்தின் தொலைப்பேசியில் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்கிறோம் என்றார். அதே போல் லிபியாவில் தொடர்பு கொள்ள முடியாத தீவிரவாதிகள் கைப்பற்றிய பகுதிகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீக்க இந்திய வெளியுறவுத்துறை துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

லிபியாவில் வசிக்கும் இந்தியர்கள் அனைவருக்கும் உச்சக்கட்ட எச்சரிக்கையை இந்திய வெளியுறவுத்துறை விடுத்துள்ளது. அந்நாட்டில் உள்ள இந்தியர்கள் அனைவருக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தை தொடர்பு கொள்ள தொலைபேசி எண் : 00218 924201771 , இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி (திரு. முஸ்தப்பா சலீம்) தொலைபேசி எண் : 912146640 . ஏற்கெனவே லிபியாவில் உள்ள இந்தியர்கள் தங்கள் வாட்ஸ் ஆப் குழுவில் உள்ளதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. அந்த வாட்ஸ் ஆப் குழுவில் இல்லாதவர்கள் உடனடியாக இணைய இந்தியர்களுக்கு வெளியுறவு துறை அறிவுறுத்தல். மேலும் திரிபோலி விமானநிலையத்தில் இருந்து இந்தியர்கள் அனைவரும் இந்தியா திரும்ப இந்திய வெளியுறவுத்துறை சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி திரு. ரவீஷ் குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


பி.சந்தோஷ்,சேலம் .

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT