உத்திரபிரதேச மாநிலத்தில் சமோசா கடைக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அலிகரில் இயங்கி வரும் சமோசா கடையின் உரிமையாளர் வரி ஏய்ப்பு செய்வதாக வணிவரித்துறைக்கு புகார் கூறியுள்ளனர். இதனால் அந்த கடைக்கு எவ்வளவு வருமானம் வருகிறது என்பதை பார்க்க வருமான வரித்துறையினர் அதிரடியாக களத்தில் இறங்கியுள்ளனர். இதையடுத்து அந்தக் கடைக்கு அருகில் இருக்கும் கடையிலிருந்து நாள் முழுவதும், அங்கு நடைபெறும் வியாபாரத்தை பார்த்துள்ளனர்.

Advertisment

income tax

அதை வைத்து நாளைக்கு எவ்வளவு சமோசா விற்பனையாகிறது என்று கணக்கு போட்டு பார்த்துள்ளனர். அதை வைத்து அந்த கடைக்கு ஆண்டுக்கு சுமார் 1 கோடி ரூபாய் வரை வருமானம் வரும் எனக் கணக்கிட்டனர். இதையடுத்து அந்த கடை உரிமையாளர் முகேஷிற்கு நோட்டீஸ் அனுப்பிய அதிகாரிகள், ஜி.எஸ்.டி வரி செலுத்துவதற்கு பதிவு செய்ய அறிவுறுத்தினர். இது பற்றி கூறிய கடையின் உரிமையாளர், தான் 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்தக் கடையை நடத்தி வருவதாகவும், எனக்கு இதுபோன்ற நடைமுறைகள் தெரியாது எனவும் கூறியுள்ளார்.