ADVERTISEMENT

கேரள தங்கக் கடத்தல் விவகாரம்... முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரனிடம் என்.ஐ.ஏ. விசாரணை?

04:31 PM Jul 23, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கேரள தங்கக்கடத்தல் விவகாரத்தில் தொடர்புடைய கும்பலோடு கேரள அமைச்சர்கள் சிலரின் எட்டு தனி உதவியாளர்களுக்குத் தொடர்பு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தங்கக்கடத்தல் விவகாரம் கேரளா அரசியலில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கம் அண்மையில் பிடிபட்டது. இந்தக் கடத்தல் விவகாரத்தில், முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் மற்றும் அவரது மனைவி, தூதரக முன்னாள் ஊழியர் சரித்குமார், ரமீஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இதுதொடர்பான விசாரணையை என்.ஐ.ஏ. முடுக்கிவிட்டுள்ள நிலையில், கேரள தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பாக கேரள முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரனிடம் என்.ஐ.ஏ. விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT