ADVERTISEMENT

அமேதியில் ராகுல் வெற்றி பெறுவார்: 'இந்தியா டுடே' கணிப்பு!

10:06 AM May 21, 2019 | santhoshb@nakk…

அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி மக்களவை தொகுதிகளிலும், கேரளா மாநிலம் வயநாடு தொகுதியிலும் மக்களவை தேர்தலில் போட்டியிட்டார். இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி காங்கிரஸ் கட்சியின் குடும்ப தொகுதியாக கருதப்படும் அமேதி, ரேபரேலி மக்களவை தொகுதியை விட்டுக் கொடுப்பதாகவும், ஆனால் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும், முன்னாள் உத்தரப்பிரதேச மாநில முதல்வருமான மாயாவதி அதிரடியாக பேசினார். இந்நிலையில் அமேதியில் ராகுலை எதிர்த்து பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி போட்டியிட்டுள்ளார்.

ADVERTISEMENT

இந்த தொகுதியில் ஐந்தாம் கட்டமாக மே- 6 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 57.33 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இந்தியா முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வந்த ஏழு கட்ட தேர்தல்கள் மே-19 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியானது.

ADVERTISEMENT

அதில் அமேதி மற்றும் வயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வெற்றி பெறுவார் எனவும், ஆனால் ராகுலுக்கும் பாஜக வேட்பாளர் ஸ்மிருதிக்கும் இடையே கடும் போட்டி ஏற்படும் என 'இந்தியா டுடே' மற்றும் 'சிஎன்எக்ஸ்' செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் வெற்றி பெறும் இரு தொகுதிகளில் அமேதி மக்களவை தொகுதியின் உறுப்பினர் பதவியை ராகுல் ராஜினாமா செய்வார். அந்த தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் அமேதி தொகுதியில் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் வெற்றி பெறுவார் என இந்தியா டுடே தனது கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் இரு நாட்களே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT