ADVERTISEMENT

இந்தியாவில் வேகமெடுக்கும் கரோனா பாதிப்பு - ஒரேநாளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி!

09:38 AM Jan 05, 2022 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவில் கரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. நாட்டில் மூன்றாவது கரோனா அலை தொடங்கிவிட்டதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்தநிலையில் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 58 ஆயிரத்து 97 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்று காலை வரையிலான 24 மணிநேரத்தில், இந்தியாவில் 37 ஆயிரத்து 379 பேருக்கு கரோனா உறுதியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 534 பேர் உயிரிழந்துள்ளனர். 15,389 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதற்கிடையே இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 2,135 ஆக உயர்ந்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக மஹாராஷ்ட்ராவில் 653 பேருக்கும், டெல்லியில் 464 பேருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒமிக்ரான் பாதிப்பு உறுதியான 2,135 பேரில், 828 பேர் குணடமடைந்துவிட்டதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT