ADVERTISEMENT

இந்தியாவில் மேலும் குறைந்த தினசரி கரோனா பாதிப்பு!

09:33 AM Jan 29, 2022 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு, கடந்த சில நாட்களாக மூன்று லட்சத்திற்கும் குறைவாக பதிவாகி வருகிறது. இந்தநிலையில் தற்போது நாட்டில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 2 லட்சத்து 35 ஆயிரத்து 532 பேருக்கு மட்டுமே கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 871 பேர் கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்துள்ளனர். 3 லட்சத்து 35 ஆயிரத்து 939 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். நாட்டில் கரோனா உறுதியாகும் சதவீதம் 13.39 சதவீதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT