Skip to main content

இந்தியாவில் கரோனா பாதிப்பு 42,000ஐ கடந்தது!

Published on 04/05/2020 | Edited on 04/05/2020

 

india coronavirus cases union health ministry


இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கை மே 17 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் மத்திய அரசு அறிவித்த ஊரடங்கில் சில தளர்வுகள் மே 4 ஆம் தேதி (இன்று முதல்) அமலுக்கு வந்தது. இருப்பினும் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள், மால்கள், திரையரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், சலூன் கடைகள் திறக்க அனுமதியில்லை என்று அரசு அறிவித்துள்ளது. 
 

இன்று (04/05/2020) காலை 08.00 மணி நிலவரப்படி இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,533 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,301- லிருந்து 1,373 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 10,633- லிருந்து 11,707 ஆக அதிகரித்துள்ளது.
 

 

india coronavirus cases union health ministry


அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 12,974 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2,115 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 548 பேர் உயிரிழந்துள்ளனர். 

அதேபோல் குஜராத்தில் 5,428, டெல்லியில் 4,549, மத்திய பிரதேசத்தில் 2,846, ராஜஸ்தானில் 2,886, தமிழகத்தில் 3,023, உத்தரப்பிரதேசத்தில் 2,645, ஆந்திராவில் 1,583, தெலங்கானாவில் 1,082, கர்நாடகாவில் 614, கேரளாவில் 500, புதுச்சேரியில் 8, பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 

http://onelink.to/nknapp


இந்தத் தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்