ADVERTISEMENT

'ஜெட் ஏர்வேஷ்' நிறுவனத்தின் பங்குகளை வாங்க முன் வராத நிறுவனங்கள்!

11:23 AM May 11, 2019 | santhoshb@nakk…


ஜெட் ஏர்வேஷ் நிறுவனம் கடும் நிதி நெருக்கடியால் சிக்கித்தவித்து வரும் நிலையில், தனது விமான சேவை அனைத்தையும் முற்றிலும் நிறுத்தியது. இதனால் ஆயிரக்கணக்கான ஜெட் ஏர்வேஷ் ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர். அதே போல் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை சம்பளத்தை ஜெட் ஏர்வேஷ் நிறுவனம் உடனடியாக வழங்கக்கூறி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தீர்வு காணவும் வலியுறுத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அவர்களை சந்தித்த ஊழியர்கள் தங்களுக்கு மாற்று பணிகளை பெற்று தர வேண்டும் எனவும், நிலுவை ஊதியத்தை பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஜெட் ஏர்வேஷ் நிறுவனத்தை மீட்கும் முயற்சியில் எஸ்பிஐ வங்கி தலைமையிலான குழு களம் இறங்கியுள்ளது. இதில் முதற்கட்டமாக ஜெட் ஏர்வேஷ் நிறுவனத்தின் பங்குகளை ஏலத்தில் விட முடிவு செய்துள்ளது. இதற்காக விண்ணப்பிக்க தேதியை அறிவித்த எஸ்பியை நேற்றுடன் காலக்கெடு முடிவடைந்த நிலையில் இரண்டு நிறுவனங்கள் மட்டும் ஏலத்திற்கு விண்ணப்பித்துள்ளதாக எஸ்பிஐ வங்கித் தலைவர் ரஜ்னீஸ் குமார் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் ஜெட் ஏர்வேஷ் நிறுவனத்தின் பங்குகள் ஏலத்தில் ஈடுப்பட எதியாட் ஏர்வேஷ் , இண்டிகோ பார்ட்னர்ஸ் , டிபிஜி கேபிடல் ஆகிய நிறுவனங்கள் முன் வந்த நிலையிலும் ஏலத்திற்கு இரண்டு விண்ணப்பங்களே வந்துள்ளது என எஸ்பியை வங்கி தலைவர் தெரிவித்துள்ளார்.

இதனால் இந்நிறுவனத்தை மீட்கும் முயற்சி பின் வாங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார். அதே போல் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இந்நிறுவனத்தின் கடன் ரூபாய் 8500 கோடியாகவும், குத்தகை பாக்கி, சம்பள பாக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும் எஸ்பிஐ வங்கி ஜெட் ஏர்வேஷ் நிறுவனத்தை மீட்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது .


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT