ADVERTISEMENT

பிபிசி அலுவலகத்தில் மூன்றாவது நாளாக தொடரும் சோதனை

11:46 AM Feb 16, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த 2002 ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் குறித்த ஆவணப்படத்தை பிரிட்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் செய்தி நிறுவனமான பிபிசி சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அதில், குஜராத் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து அரசு ரகசிய விசாரணை மேற்கொண்டதாகவும் அதில் அப்போதைய முதல்வர் மோடி தலைமையிலான குஜராத் அரசு திட்டமிட்டே இந்த கலவரத்தை நடத்தியதாகக் கண்டுபிடிக்கப்பட்டது எனவும் குறிப்பிட்டிருந்தது.

மேலும், குஜராத் கலவரத்திற்கு மோடியே நேரடி பொறுப்பு என்றும் இது குறித்து அவரிடம் விசாரிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தது. 'இந்தியா: மோடிக்கான கேள்வி' (India: The Modi Question) என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டிருந்த இந்த ஆவணப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியதையடுத்து, மத்திய அரசு இந்த ஆவணப்படத்திற்கு கடும் கண்டனங்கள் தெரிவித்ததோடு யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஆவணப்படத்தை வெளியிடத் தடை விதித்தது. இது பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் செயல் எனப் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் தான் வருமான வரித்துறையினர் பிபிசி நிறுவனத்தின் டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் நேற்று முன்தினம்(14.2.2023) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இரண்டு நாளாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை 3வது நாளான இன்றும் தொடர்ந்து வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது சோதனை அல்ல கணக்கு ஆய்வு என்று தெரிவித்துள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் இது மறைக்கப்பட்ட மற்றும் அறிவிக்கப்படாத சொத்து மதிப்புக்களை வெளிக்கொண்டு வரும் வகையில் பிபிசியின் வங்கிக் கணக்குகளைச் சரி பார்த்து வருவதாகக் கூறியுள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT