ADVERTISEMENT

உச்சகட்ட பதற்றம்; ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

10:49 AM Oct 27, 2023 | mathi23

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த சில வாரங்களாக துப்பாக்கிச்சூடு மோதல் நடந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 10ஆம் தேதி ஷோபியான் மாவட்டம் அல்ஷிபோரா பகுதியில் பாதுகாப்பு படையினரின் தேடுதல் வேட்டையில் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகளும், குல்காம் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், குப்வாரா எல்லையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சிப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், குப்வாரா மாவட்டம் மச்சில் செக்டார் எல்லை பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நடவடிக்கையின் போது, நேற்று (26-10-23) இரவு எல்லையில் ஊடுருவ பதுங்கிருந்த பயங்கரவாதிகள் நடமாட்டத்தை கண்காணித்த பாதுகாப்பு படையின் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் இரு தரப்பிலும் கடும் மோதல் ஏற்பட்டது.

இந்த தாக்குதலில், எல்லையில் ஊடுருவ முயன்ற 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், இந்த தாக்குதலில் படுகாயமடைந்த இந்திய ராணுவ வீரர் ஒருவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, இன்னும் பயங்கரவாதிகள் ஊடுருவ கூடும் என்ற காரணத்தினால் குப்வாரா எல்லையில் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT