ADVERTISEMENT

" மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்த உறுதுணையாக இருப்பேன்" - தேநீர் விருந்தில் தமிழிசை உறுதி!

11:39 PM Sep 06, 2021 | kalaimohan

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 15-ஆவது சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 26-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. கூட்டத்தொடர் முடிந்ததை அடுத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தேநீர் விருந்து கொடுக்கும் நிகழ்ச்சி புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாஸில், துணைநிலை ஆளுநர் தமிழிசை தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவை தலைவர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

இதில் கலந்துகொண்டு தமிழிசை சௌந்திரராஜன் பேசும்போது, "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தனது முதல் பட்ஜெட் கூட்டத்தொடரை நிறைவு செய்திருக்கின்றது. இதில் மக்களுக்கு பயன்படும் திட்டங்களை அறிவித்திருக்கின்றது. புதுச்சேரி துணைநிலை ஆளுநர் என்ற வகையிலும், புதுச்சேரி மக்கள் மீது அக்கறை கொண்டவர் என்ற வகையிலும் மக்களுக்கு பயன்தரும் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த உறுதுணையாக இருப்பேன்" என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, " புதுச்சேரி மீது அக்கறை கொண்ட துணைநிலை ஆளுநர் இருக்கும் வரை புதுச்சேரி நல்ல முன்னேற்றம் அடையும். தேசிய ஜனநாயக கூட்டணி அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தும்" என்று தெரிவித்தார்.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT