தெலுங்கானா மாநில கவர்னரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் இன்று காலை 8 மணிக்கு விமானம் மூலம் சென்னையில் இருந்து திருச்சி வந்து சேர்ந்தார். திருச்சி விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் சிவராசு தமிழிசை செளந்தரராஜனுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தார். அதனைத்தொடர்ந்து கார் மூலம் தஞ்சைக்கு புறப்பட்டுச் சென்ற அவர்தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் பாரதியார் நூற்றாண்டு நினைவு கருத்தரங்கைத்தொடங்கி வைத்து பேசினார். அதன்பின் விழாவைமுடித்துவிட்டு 11 மணி அளவில் மீண்டும் சென்னை திரும்பியுள்ளார்.
ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை பூங்கொத்துடன் வரவேற்ற மாவட்ட ஆட்சியர்!
Advertisment