ADVERTISEMENT

லாங் ட்ரைவ் அழைத்துச் சென்று பிரபல நடிகை சுட்டுக்கொலை; இரண்டு வயது குழந்தையால் சிக்கிய கணவர்

08:27 AM Dec 30, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

லாங் டிரைவ் போகலாம் என மனைவியை அழைத்துச் சென்ற கணவன் துப்பாக்கியால் அவரை சுட்டுக் கொலை செய்த நிலையில், மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டதாக போலீசில் நாடகமாடி, பின்னர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஜார்க்கண்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரபல நடிகையான ரியா குமாரி. இவரது கணவர் பிரகாஷ் குமார் யூடியூப் பிரபலமாகவும் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். பிரகாஷ் குமார் ஹவுரா போலீஸாருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்தார். அதில், “தனது மனைவி ரியா குமாரி மற்றும் தனது குழந்தையுடன் கொல்கத்தா நோக்கி காரில் சென்று கொண்டிருந்த பொழுது வழிமறித்த மூன்று கொள்ளையர்கள் துப்பாக்கியைக் காட்டி மிரட்டினர். தடுக்க முற்பட்டபோது தன்னுடைய மனைவியைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டனர். அதன் பிறகு குண்டடிபட்ட தனது மனைவியை காரில் ஏற்றிக்கொண்டு மூன்று கிலோமீட்டர் தூரம் பயணித்து தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தேன். ஆனால், அங்கு மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.” என்று போலீசாரிடம் பிரகாஷ் குமார் தெரிவித்தார்.

உடனடியாக மருத்துவமனைக்கு வந்த போலீசார் இந்தச் சம்பவம் தொடர்பாக பிரகாஷ் குமாரிடம் விசாரணை நடத்தினர். தனது இரண்டரை வயது மகளை தோளில் போட்டுக் கொண்டு பரிதாபமாக பிரகாஷ் குமார் மீண்டும் நடந்தவற்றைக் கூறியுள்ளார். ஆனால், அவரை சந்தேகித்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் அவர்களது 2 1/2 வயது மகளிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் பிரகாஷ் குமார் தெரிவித்த தகவல்கள் போலியானது என்பதை உறுதிசெய்த போலீசார், மீண்டும் பிரகாஷ் குமாரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

அப்பொழுது தன்னைவிட அழகாக இருப்பதாலும் அதிகம் பணம் சம்பாதிப்பதாலும் தன்னுடைய மனைவி தன்னை மதிப்பதில்லை என்றும், இதனால் தங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், அவரை சுட்டுக்கொல்ல முடிவு செய்தேன். இதன் காரணமாக லாங் டிரைவ் போகலாம் என அழைத்துக் கொண்டு வந்து துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தேன் என்றும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அதன் பிறகு பிரகாஷ் குமாரை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT