ADVERTISEMENT

இனி ஹோண்டா பிரியோ (Brio) கார் கிடையாது...!

02:39 PM Feb 11, 2019 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஜப்பான் கார் நிறுவனமான ஹோண்டா, அதன் பிரியோ (Brio) கார் மாடலின் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளதாக அந்நிறுவனத்தின் விற்பனை பிரிவு மூத்த துணைத்தலைவரான ராஜேஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

பிரியோ மாடல் ஹோண்டா நிறுவனத்தின் முதல்நிலை காராக இருந்துவந்தது. தற்போது இந்த மாடல் காரின் உற்பத்தியை நிறுத்தியபின் அந்நிறுவனத்தின் அமேஸ் மாடல் கார் முதல்நிலை காராக இருக்குமெனக் கூறினார். மேலும், வாடிக்கையாளர்கள் பெரிய கார்களையே அதிகம் தேர்வு செய்கின்றனர் அதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும், இந்த முடிவு ஆறு, ஏழு வருடங்களுக்கு முன்பே எடுத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT