ADVERTISEMENT

பேரிடர் பாதித்த மாநிலமாக இமாச்சலம் அறிவிப்பு

07:40 PM Aug 18, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

இமாச்சலப் பிரதேசம் முழுவதும் இயற்கை பேரிடர் பாதித்த மாநிலமாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. சில நாட்களாகவே வரலாறு காணாத பலத்த மழை காரணமாக இமாச்சலப் பிரதேசத்தில் மழை, வெள்ளம், நிலச்சரிவு என பேரிடர்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருவதால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கு உயிரிழந்துள்ளனர். தொடர்ச்சியாக நிகழ்ந்த நிலச்சரிவு, பலத்த மழை, வெள்ளம் ஆகிய காரணங்களால் ஏராளமான பொதுமக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல் பொதுச் சொத்துக்களும் தனியார் சொத்துக்களும் அழிந்துள்ளன.

இடைவிடாத மழை, மேக வெடிப்பு போன்றவற்றால் மாநிலம் முழுவதும் பேரழிவை சந்தித்துள்ளது, மறுபுறம் தொடர்ச்சியாக மீட்புப் பணிகளும் நடைபெற்று வருகிறது. ஆயிரக் கணக்கான வீடுகள் நாசமாகிவிட்டதாக தெரிவித்துள்ள அம்மாநில அரசு, மழை வெள்ள பாதிப்புகளால் பயிர்களும், விவசாய நிலங்களும் அழிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகளில் ராணுவம், விமானப்படை, தேசிய மாநில பேரிடர் மீட்புப் படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநில காவல்துறை, தீயணைப்பு துறை, ஊர்காவல் படையினர், தன்னார்வல தொண்டு நிறுவனத்தினர் என கூட்டு முயற்சியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இரவு பகலாக மீட்புப் பணிகள் மற்றும் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வரலாறு காணாத பேரழிவு காரணமாக இமாச்சலப் பிரதேசத்தை தேசிய பேரழிவு ஏற்பட்டுள்ள மாநிலமாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT