ADVERTISEMENT

”மாட்டுக்கறி சாப்பிட மாட்டோம் என்று சொன்னால் உதவுங்கள்”- இந்து மகாசபா தலைவர்

11:07 AM Aug 25, 2018 | santhoshkumar

ADVERTISEMENT

கேரள மக்கள் மாட்டுக்கறி உண்பதால்தான் இயற்கை அவர்களைத் தண்டிக்க வெள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது என்று இந்து மகாசபா தலைவரான சாமியார் சக்ரபாணி மகராஜ் கூறி சர்ச்சையை கிளப்பியிருக்கிறார். இவ்வாறு அவர் ஒரு தனியார் தொலைக்காட்சியின் பேட்டி ஒன்றிற்கு பதில் அளித்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவ வேண்டியதுதான். ஆனால், இயற்கையையும் உயிரினங்களையும் மதிப்பவர்களுக்கு உதவ வேண்டும். கேரள மக்களுக்கு ரொட்டி கிடைத்தால் அதற்கு தொட்டுக்குள்ள பசு மாட்டைக் கொன்று அதன் இறைச்சியை சாப்பிடுகின்றனர். அதனால், மாட்டுக்கறியை சாப்பிடாதவர்களுக்கு மட்டும் இந்துக்கள் உதவ வேண்டும். மாட்டுக்கறி சாப்பிடுபவர்களுக்கு உதவுவதாக இருந்தால் எதிர்காலத்தில் மாட்டுக்கறி சாப்பிட மாட்டோம் என்று அவர்களிடம் சத்தியம் வாங்கிக்கொண்டு உதவ வேண்டும். இந்துக்களின் உணர்வுகளை மதிக்காமல் பசுவைக் கொன்று அதன் இறைச்சியை சாப்பிடுபவர்களை மன்னிக்கவே கூடாது என்று மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT