up seer

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பிரபல சாமியார்ஜகத்குரு பரமஹன்ஸ் ஆச்சார்ய மகாராஜ். நேற்று (28.09.2021) அயோத்தியாவில் செய்தியாளர்களைச் சந்தித்த இவர், அக்டோபர் 2ஆம் தேதிக்குள் இந்தியாவை இந்து ராஷ்டிரமாக அறிவிக்க வேண்டுமெனகோரிக்கை விடுத்துள்ளார். அவ்வாறு அறிவிக்கவில்லையென்றால் சரயு நதியில் ஜல சமாதி அடையப்போவதாகவும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

Advertisment

மேலும் அவர், இந்தியாவில் வாழும் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களின் குடியுரிமையை மத்திய அரசு இரத்து செய்ய வேண்டும்எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.பரமஹன்ஸ் ஆச்சார்ய மகாராஜின் இந்தக் கோரிக்கை தற்போது சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது.

Advertisment

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஜகத்குரு பரமஹன்ஸ் ஆச்சார்ய மகாராஜ் இந்தக் கருத்தைக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.