ADVERTISEMENT

81 வருட தமிழ் பள்ளியை மூடும் குஜராத் அரசு.. கேள்விக்குறியாகும் மாணவர்களின் படிப்பு!

09:23 AM Sep 23, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்று வெளிநாடுகளிலும் இந்தியாவினுள்ளும் தமிழின் பெறுமையைப் பற்றி பேசும் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலத்தில் தமிழ் பள்ளியை மூட அரசாங்கம் முயன்று வருகிறது.

பள்ளியை மூட வேண்டாம் என்று மாவட்ட கல்வி அலுவலர் வரை சந்தித்துவிட்டனர் குஜராத் வாழ் தமிழ் மக்கள். ஆனால் பள்ளியை மூடி மாற்றுச்சான்றிதழை கொடுக்க காலக்கெடுவும் விதித்துவிட்டது பள்ளி நிர்வாகம்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் தமிழ் மேல்நிலைப்பள்ளி கடந்த 81 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படித்த ஏராளமானோர் பல்வேறு அரசுத்துறையிலும் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் தற்போது மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கூறி பள்ளியை மூட பள்ளி நிர்வாகமும் மாவட்டக்கல்வி நிர்வாகமும் முடிவெடுத்து அறிவிப்பும் செய்துள்ளனர்.

ஆனால் தமிழ் மாணவர்களும், மாணவர்களின் பெற்றோர்களான தமிழர்களும் பள்ளியை மூடக்கூடாது. பள்ளியை மூடினால் படிப்பு வீணாகும் என்று மாவட்ட கல்வி அலுவலர் தொடங்கி கல்வி அமைச்சர் வரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் குஜராத் வாழ் தமிழர்களின் கோரிக்கையை அரசும் அதிகாரிகளும் ஏற்றதாக தெரியவில்லை.

அதாவது செப்டம்பர் 23ஆம் தேதி மதியம் 12 மணிக்குள் மாணவர்கள் பள்ளியில் மாற்றுச் சான்றிதழை பெற்றுக்கொள்ள வேண்டும். தவறினால் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம்தான் மாற்றுச் சான்றிதழ் பெறமுடியும் என்று நோட்டிஸ் ஒட்டியுள்ளது. இந்த நிலையில் மாணவர்களின் பெற்றோர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளதுடன் தமிழ்ப்பள்ளி மூடுவதை தடுக்க குஜராத் வாழ் தமிழர்கள் ஒன்று சேர வேண்டும் என்றும் அழைப்பு கொடுத்துள்ளனர். இதுதான் மோடிஜியின் தமிழ் பற்றா? என்று குஜராத் வாழ் தமிழ் மக்கள் வருத்தும் தெரிவித்துவருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT