ADVERTISEMENT

சொந்தமாக குதிரை வைத்திருந்ததற்காக தலித் இளைஞர் படுகொலை!

12:00 PM Apr 01, 2018 | Anonymous (not verified)

இந்தியாவில் சாதிய பாகுபாடுகளும், ஒடுக்குமுறைகளும் குறைந்துவிட்டதாகக் கூறப்பட்டாலும், அது பெயரளவில் கூட நடைமுறையில் இல்லை என்பதற்கு உதாரணமாக நடந்திருக்கிறது குஜராத்தில் தலித் இளைஞர் படுகொலை.

ADVERTISEMENT

ADVERTISEMENT

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ளது டிம்பி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த பிரதீப் ரத்தோட் எனும் 21 வயது இளைஞரை, சொந்தமாக குதிரை வைத்திருந்ததற்காக ஆதிக்க சாதியினர் சிலர் கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

பிரதீப் ரத்தோட் பள்ளிப்படிப்பை பாதியில் விட்டுவிட்டு, தன் தந்தையோடு விவசாயத்தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். குதிரைகளின் மீது அதீத ஆர்வம் கொண்டிருந்த அவர், எட்டு மாதங்களுக்கு முன்னர் குதிரை ஒன்றை விலைக்கு வாங்கி சவாரி செய்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் பிரதீப் மற்றும் அவரது தந்தை இருவரும் குதிரையில் சவாரி செய்தபோது, ஷத்திரிய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் அதைக் கண்டித்தது மட்டுமின்றி, கொலைமிரட்டலும் விடுத்துள்ளார். மேலு, ஷத்ரியர்கள் மட்டுமே குதிரைகள் வைத்திருக்கவேண்டும். செல்வாக்கு மற்றும் வலிமையின் அடையாளமான குதிரையை உங்களைப் போன்றவர்கள் வைத்திருக்கக்கூடாது எனவும் கூறியுள்ளார். ஆனாலும், இதை பிரதீப் கண்டுகொள்ளாத நிலையில், தற்போது பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்தக் கொலை சம்பவத்தில் தொடர்புடைய மூவரைக் கைதுசெய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT