நித்யானந்தாவிற்கு உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் தனது இரண்டு மகள்களை நித்யானந்தா கடத்திக்கொண்டு குஜராத்தில் செயல்படும் அவரது ஆசிரமத்தில் வைத்திருப்பதாக ஜனார்த்தனா ஷர்மா புகார் அளித்தார். இதன்பின் நித்யானந்தா மீதும் குஜராத்தில் செயல்படும் அந்த ஆசிரமம் குறித்து பல புகார்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வந்துள்ளது.

Advertisment

nithyanandha

இந்நிலையில், குஜராத் மாநிலத்திலுள்ள ஹீராபூர் பகுதியில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தை மாவட்ட நிர்வாகம் மூடியுள்ளது.தனியார் பள்ளியில் சட்டவிரோதமாக ஆசிரமம் செயல்பட்டதாக வந்த புகாரை அடுத்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆசிரமத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர் அதிகாரிகள். ஆசிரமம் மீதான தொடர் புகாரை அடுத்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.