ADVERTISEMENT

ஜி.எஸ்.டிக்குள் பெட்ரோல்?, முடிவை அவர்கள்தான் எடுக்கவேண்டும் - பெட்ரோலியத்துறை அமைச்சர்!

02:50 PM Feb 23, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சில மாநிலங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்தது. அஸ்ஸாம், நாகலாந்து, மேகாலயா உள்ளிட்ட சில மாநிலங்கள், பெட்ரோல் மீதான வரியைக் குறித்து பெட்ரோல் - டீசல் விலையை சிறிதளவு குறைத்துள்ளனர். இருப்பினும் இந்தியா முழுவதும் பெட்ரோல் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. பெட்ரோல், டீசல் மீதான வரியை ரத்து செய்ய எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. மேலும் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் "சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு காரணமாக, பெட்ரோல் மற்றும் டீசலுக்கான நுகர்வோர் விலை உயர்ந்துள்ளது. இது படிப்படியாக குறைந்துவிடும். கரோனாவால் உலகளாவிய விநியோகம் பாதிக்கப்பட்டதுடன், பெட்ரோலிய பொருட்களின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் பெட்ரோலியப் பொருட்கள் ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவரப்படுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், “பெட்ரோலியப் பொருட்களைத் தங்கள் வரம்பிற்குள் சேர்க்குமாறு, ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கு நாங்கள் தொடர்ந்து கோரிக்கை வைக்கிறோம். அது மக்களுக்குப் பயனளிக்கும். ஆனால் முடிவெடுக்க வேண்டியது (ஜி.எஸ்.டி கவுன்சில்) அவர்கள்தான்" எனக் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT