ஒரே நாடு ஒரே வரி எனும் திட்டத்தின்கீழ் இரண்டு வருடங்களுக்கு முன்பு 2017 ஜுலை 1-ஆம் தேதி முதல் ஜீஎஸ்டி-ஐ மத்திய அரசு அமல்படுத்தியது. ஆனால் ஜிஎஸ்டி-ஐ செயல் படுத்துவதற்கான கவுன்சிலை 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமே நிதி அமைச்சகம் அமைத்துவிட்டது. அதன் பிறகு அவ்வப்போது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்களைக் கூட்டி ஜிஎஸ்டியில் பல மாற்ங்களை நிதி அமைச்சகம் கொண்டு வந்தது.

Advertisment

gg

இந்த கவுன்சில் அமைக்கப்பட்டு இரண்டு வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் இதன் செயல்பாடுகள் குறித்து நிதி அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் இரண்டு ஆண்டுகளில் ஜிஎஸ்டி கவுன்சில் 30 கூட்டங்களை நடத்தியுள்ளதாகவும். அதில் 918 முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.