ADVERTISEMENT

கத்தி, எல்.இ.டி பல்புகளுக்கு வரி உயர்வு... ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல்!

06:27 PM Jun 29, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சண்டிகரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 47வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நேற்று (28/06/2022) தொடங்கியது. முதல் நாளான நேற்று அமைச்சர்கள் குழு பரிந்துரைத்த சிலவற்றிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முத்திரை இல்லாமல் பொட்டலமிட்டு விற்பனை செய்யப்படும் இறைச்சி, மீன், தயிர், பன்னீர், உலர் பருப்பு வகை, காய்கறிகள் கோதுமை, பட்டாணி மாவு, வெல்லம் போன்ற பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி விதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் எல்.இ.டி, கத்திகள் மீதான ஜிஎஸ்டி12% லிருந்து 18% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சூரிய சக்தியால் தண்ணீர் சுடவைக்கும் இயந்திரங்களுக்கு 5%லிருந்து 12% ஆக ஜிஎஸ்டி உயர்த்தப்பட்டுள்ளது. கிரைண்டர் மற்றும் அரசி ஆலை இயந்திரங்களுக்கு 5%லிருந்து 18% ஆக ஜிஎஸ்டி உயர்த்தப்பட்டுள்ளது. தண்ணீர் எடுக்கப் பயன்படும் மோட்டார் பாம்புகள் மீதான ஜிஎஸ்டி 12% லிருந்து 18% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT