ADVERTISEMENT

தொலைபேசி உபகரணங்கள், ஸ்மார்ட் வாட்ச், 10 - 20 சதவிகிதம் வரி உயர்வு....!

02:27 PM Oct 12, 2018 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தொலைபேசி உபகரணங்கள் ஸ்மார்ட் வாட்ச் மற்றும் இதர சில மின்னணு போன்ற இறக்குமதி பொருட்களின் மீது 10 முதல் 20 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரிவிதிப்பு அக்டோபர் 12 முதல் அதாவது இன்று முதல் அமலுக்கு வரும் என்று அறிவித்துள்ளது. இதேபோல் கடந்த மாதம் ஏ.சி, ஃப்ரிட்ஜ் போன்ற 19 பொருட்கள் மீது இறக்குமதி வரி விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நிதி ஆண்டில் மட்டும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 14% சரிந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT