ADVERTISEMENT

விவசாயிகள் பேரணி: வன்முறையைத் தூண்டியவர்களிடம் அரசு அடையாள அட்டை! - காங்கிரஸ் குற்றச்சாட்டு!

04:01 PM Jan 27, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிவரும் விவசாயிகள், நேற்று (26.01.2021) ட்ராக்டர் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது. போலீஸார் விவசாயிகள் மீது தடியடி நடத்தியதோடு, கண்ணீர் புகைக்குண்டுகளையும் வீசினர்.

இந்நிலையில் வன்முறையைத் தொடங்கியவர்களிடம், அரசு அடையாள அட்டை இருந்ததாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர், "காசிப்பூர் எல்லையில், ட்ராக்டர் பேரணிக்குத் திட்டமிடப்பட்ட பாதையில் போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தினர். காவல்துறையினர் தடை விதித்தனர். மேலும் கண்ணீர் வெடிகுண்டுகளைப் பயன்படுத்தினர். இது வன்முறையைத் தூண்டியது. வன்முறையைத் தொடங்கிய 15 பேரை விவசாயிகள் நேற்று காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்களிடம் அரசு அடையாள அட்டைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அரசாங்கத்தில் யார் இருக்கிறார்கள் என்பது இப்போது உங்களுக்குப் புரியும். இது ஒரு அமைதியான இயக்கத்தைக் கெடுப்பதற்கான ஒருங்கிணைந்த சதித்திட்டம்" எனக் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT