ADVERTISEMENT

பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மத்திய அரசு!

04:17 PM Jul 04, 2019 | santhoshb@nakk…

இந்தியாவில் பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. அந்த பட்டியலில் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பி.எஸ்.என்.எல் (BSNL), எம்.டி.என்.எல் (MTNL) நிறுவனங்கள் அதிக நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களாக உள்ளது. இந்த நிறுவனங்களில் ஏற்பட்ட இழப்பு தொடர்பாக மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சகத்திற்கு பி.எஸ்.என்.எல் நிறுவனம் கடிதம் எழுதியது. அந்த கடிதத்தில் தனது நிறுவன ஊழியர்களுக்கு ஊதியம் கூட கொடுக்க முடியாத நிலையில் தவிப்பதாகவும், உடனடியாக பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு மத்திய அரசு நிதி உதவியை அளிக்க வேண்டும் என வலியுறுத்திருந்தது. இந்நிலையில் பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் ஆகிய நிறுவனங்கள் மூடப்படும் பட்சத்தில் பெரும் இழப்பு ஏற்படும் என்பதால், அந்த நிறுவனங்களை மீட்டெடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இதற்காக இரு நிறுவனங்களுக்கும் ரூபாய் 74,000 கோடி நிதியை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பான வரைவு அமைச்சரவைக் குறிப்பில், 4ஜி தொழில் நுட்பத்திற்கு 20,000 கோடி ரூபாயும், புதிய சேவைகள் மற்றும் உற்பத்தியை மக்களிடம் கொண்டு செல்ல 13,000 கோடி ரூபாயும் ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2018- 2019 ஆம் ஆண்டு நிதி ஆண்டில் 13,804 கோடி ரூபாயை இழந்த பி.எஸ்.என்.எல். நிறுவனமானது, நாட்டிலேயே அதிக இழப்பை சந்தித்த பொதுத்துறை நிறுவனமாக உள்ளது.

அடுத்த இடத்தில் ஏர் இந்தியாவும், அதற்கடுத்த இடத்தில் எம்.டி.என்.எல் (MTNL) என்ற தொலைதொடர்பு நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனமானது 3,398 கோடி ரூபாய் இழப்பை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 2019- 2020 ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் நாளை தாக்கலாகிறது. இந்த பட்ஜெட்டில் நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை மீட்டெடுக்க, சிறப்பு திட்டத்தை மத்திய அரசு அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT