ADVERTISEMENT

“அவர்களுக்கு நியாயமான வாய்ப்பு கிடைக்கட்டும்" - நீட் தொடர்பாக மத்திய அரசுக்கு ராகுல் வேண்டுகோள்!

11:39 AM Sep 07, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. அத்தேர்வுக்கான ஹால்-டிக்கெட் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. http://neet.nta.nic.in என்ற இணைய முகவரியில் மாணவர்கள் இளங்கலை நீட்டிற்கான ஹால்-டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இந்தநிலையில், இளங்கலை நீட் தேர்வைத் தள்ளிவைக்க வேண்டும் என அத்தேர்வில் கலந்துகொள்ளவிருக்கும் மாணவர்களில் ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்துவருகின்றனர். இளங்கலை நீட் தேர்வு நடைபெறவுள்ள நாளிலும், அதற்கு முந்தைய மற்றும் பிந்தைய நாட்களிலும் வேறு சில தேர்வுகளும் நடைபெறவுள்ளதைச் சுட்டிக்காட்டி அவர்கள் இந்தக் கோரிக்கையை எழுப்பிவருகின்றனர்.

மேலும், இதுதொடர்பாக சில மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர். ஆனால் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இளங்கலை நீட் தேர்வை ஒத்திவைக்க மறுத்துவிட்டது. இந்தநிலையில், இளங்கலை நீட் தேர்வை ஒத்திவைக்குமாறு ராகுல் காந்தி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மாணவர்களின் துயரத்தைக் காணாமல் மத்திய அரசு கண்ணை மூடிக்கொண்டுள்ளது. நீட்டை ஒத்திவையுங்கள். அவர்களுக்கு நியாமான வாய்ப்பைக் கிடைக்கவிடுங்கள்" என கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT