ADVERTISEMENT

கோவா சர்வதேச திரைப்பட விழா ஒத்திவைப்பு!

04:02 PM Sep 24, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

நவம்பர் மாதம் நடைபெறவிருந்த 51 -ஆவது கோவா சர்வதேச திரைப்பட விழா அடுத்தாண்டு ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கான மாற்று தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் மாதம் 20- ஆம் தேதி முதல் நவம்பர் 28- ஆம் தேதி வரை நடைபெறவிருந்த கோவா சர்வதேச திரைப்பட விழா அடுத்தாண்டு ஜனவரி மாதம் 16- ஆம் தேதி முதல் ஜனவரி 24- ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில், சர்வதேச திரைப்பட விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT