நீண்ட நாட்களாக கணைய புற்று நோயால் அவதிப்பட்டு வந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், நேற்று இரவு உயிரிழந்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/parikkars-std.jpg)
அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் பாரிக்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மத்திய அமைச்சரவை சார்பில் இன்று கூட்டம் நடைபெற உள்ளது.
அவரது உடல் கலா அகாடமியில் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. மாலை 4 மணியளவில் இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு, இறுதிச்சடங்கு முடிந்ததும் மாலை 5 மணியவில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு பாரிக்கரின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது. அதன் பின் மனோகர் பாரிக்கரின் உடல் அங்குள்ள மிராமர் கடற்கரையில் தகனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)