ADVERTISEMENT

பிரியங்கா காந்தியின் கோவா பயணம் - வரவேற்கும் இராஜினாமா கடிதங்கள்!

03:37 PM Dec 10, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கோவா மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் இன்று கோவா செல்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ளவுள்ளார். இந்தநிலையில் கோவா மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் கட்சியில் இருந்து இராஜினாமா செய்துள்ளனர்.

தெற்கு கோவாவை சேர்ந்த மூத்த தலைவரான மோரேனோ ரெபெலோ, தற்போது சிட்டிங் எம்.எல்.ஏவாக இருக்கும் அலிக்சோ ரெஜினால்டோ லோரென்கோ கட்சிக்கு எதிராக வேலை செய்தும், அவருக்கு தேர்தலில் மீண்டும் சீட் அளிக்கப்பட்டிருக்கிறது என்பதால் கட்சியிலிருந்து விலகுவதாக கோவா காங்கிரஸ் தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதேபோல் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த சுயேச்சை எம்.எல்.ஏவான ரோஹன் கவுண்டேவின் ஆதரவாளர்கள் நால்வர் கட்சியில் இருந்து விலகியுள்ளனர். ஆதரவாளர்கள் நால்வர் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததால், சுயேச்சை எம்.எல்.ஏ ரோஹன் கவுண்டே காங்கிரஸ் கட்சியில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில் அவரின் ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து விளங்கியுள்ளனர். மேலும் அவர்கள் காங்கிரஸ் கட்சி கோவா தேர்தலை எதிர்கொள்வதில் தீவிரம் காட்டவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT