Alexo Reginaldo appointed Goa Congress executive chairman

Advertisment

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் இன்று (17/10/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் ஒப்புதலுடன் கோவா மாநில காங்கிரஸ் கமிட்டி செயல்தலைவராக அலெக்ஸோ ரெஜினால்டோ லூரென்கா நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், கோவா மாநில காங்கிரஸ் கமிட்டி பொருளாளராக ஜேம்ஸ் ஆண்ட்ரேட் நியமிக்கப்பட்டுள்ளார்." இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தாண்டு கோவா மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் வியூகத்தை முன்னெடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி புதிய தலைவரை நியமித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.