ADVERTISEMENT

”ஜெயலலிதா உடல்நலக்குறைவால் இருந்தபோது யாரும் பிரச்சனை ஆக்கவில்லை"- பாஜக

10:00 AM Sep 25, 2018 | santhoshkumar


கோவா மாநில முதல்வர் மனோகர் பரிகார், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த ஒரு வருட காலமாக தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். கணையைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பரிகார், அமெரிக்காவுக்கு சென்றும் மூன்று மாதங்கள்வரை சிகிச்சை பெற்று வந்தார். மேலும், உடல்நிலை சரி ஆகாததால், தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இந்நிலையில், கோவா மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி வர வேண்டும், இல்லையென்றால் இந்த ஆட்சியைக் கலைத்துவிட்டு, ஆட்சி மாற்றம் அல்லது வேறு முதல்வரை கொண்டு வரவேண்டும் என்று காங்கிரஸ் கூறி வந்தது.


இதுகுறித்து பாஜக தலைவர் அமித்ஷா ட்விட்டரில், “கோவா பிரச்சனை தொடர்பாக பா.ஜ.க முக்கியத் தலைவர்களின் ஆலோசனை நடைபெற்றது. அதன் இறுதியில், மனோகர் பாரிக்கரே கோவாவின் முதல்வராகத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அம்மாநில அமைச்சரவை மற்றும் துறைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

இப்படி மனோகர் பரிகாரே முதல்வராக செயல்படுவார் என்று தெரிவித்த போதிலும் காங்கிரஸ் உடும்பு பிடியாக பிடித்து பாஜகவை விமர்சித்துகொண்டு வருகிறது. இது பற்றி மஹாராஷ்ட்டிரவாடி கோமந்தக் கட்சியைச் சேர்ந்தவரும், கோவா மாநில பொதுப் பணித்துறை அமைச்சருமான சுதின் தவாலிகர் நேற்று ஒரு பெருநிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது நிபுனர்கள் அவரிடம் இதுகுறித்து கேள்வி கேட்கையில், ”தமிழகத்தில் ஒன்றரை ஆண்டுகளாக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தபோது அதையெல்லாம் யாரும் ஒரு பிரச்சினையாக ஆக்கவில்லை. ஆனால், மனோகர் பாரிக்கர் உடல்நிலையை மட்டும் ஏன் பிரச்சினை ஆக்குகிறீர்கள் எனத் தெரியவில்லை. கோவாவில் நிலவும் அனைத்துப் பிரச்சினைகளும் படிப்படியாகக் குறையும்” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT