ADVERTISEMENT

டிச.10- ல் பிபின் ராவத் உடலுக்கு இறுதிச் சடங்கு!

10:14 PM Dec 08, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் இன்று (08/12/2021) பிற்பகல் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பிபின் ராவத்தோடு பயணித்த அவரது மனைவியும், 11 இராணுவ அதிகாரிகளும் உயிரிழந்துள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் இந்திய விமானப் படையினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்

ADVERTISEMENT

விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரின் கேப்டன் வருண் சிங், 80% தீக்காயங்களுடன் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவருக்கு உயரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் (வயது 63) மறைவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள், மாநில ஆளுநர்கள் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல்கள் நாளை (09/12/2021) ராணுவ விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்லப்படுகின்றன. அதைத் தொடர்ந்து, அங்கு அவர்களது உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்துகின்றன. பின்னர், டிசம்பர் 10- ஆம் தேதி அன்று டெல்லியில் உள்ள பிபின் ராவத்தின் இல்லத்தில் காலை 11.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்கு உடல் வைக்கப்படவுள்ளது. பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு அவர்களது உடல் காமராஜ் மார்க்கில் (Kamraj Marg) இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு டெல்லி கண்டோன்மென்ட்டில் (Delhi Cantonment) உள்ள ப்ரார் சதுக்கத்தில் (Brar Square) உள்ள மயானத்தில் உடல்கள் தகனம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT