ADVERTISEMENT

ஆட்சி நாற்காலிக்கு அருகில் இருப்பது யார்? - கருத்துக்கணிப்பு முடிவுகள்

06:16 PM Jan 31, 2019 | george@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் டைம்ஸ் நௌவ் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக அதிக நாடாளுமன்ற தொகுதிகளைக் கொண்ட உத்திர பிரதேசம், மஹாராஷ்டிரம், மேற்கு வங்காளம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் பெருவாரியாக வெற்றி பெரும் கட்சி ஆட்சி நாற்காலிக்கு மிக அருகில் செல்ல வாய்ப்பிருக்கிறது என்ற காரணத்தால் இவை அதிக கவனத்தை ஈர்த்துள்ளன.

அதிலும் குறிப்பாக 80 தொகுதிகளைக் கொண்ட ஸ்டார் மாநிலமாகக் கருதப்படும் உத்திரபிரதேசத்தில் பாஜக 27 இடங்களையும் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் 51 இடங்களையும் காங்கிரஸ் கட்சி 2 இடங்களையும் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. உ.பி யில் உள்ள வாரணாசியில் நரேந்திர மோடியும் ரேபரேலி அல்லது அமேதி தொகுதியில் பிரியங்கா காந்தியும் போட்டியிடலாம் என்றிருக்கும் எதிர்பார்ப்புகள் குறிப்பிடத்தக்கவை.

48 தொகுதிகளை உடைய மஹாராஷ்டிர மாநிலத்தில் பாஜக 43 இடங்களையும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி 5 இடங்களையும் பெறும் என்றும் 42 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 32 இடங்களையும் பாஜக 9 இடங்களையும் காங்கிரஸ் 1 இடத்தை மட்டும் பிடிக்கும் என்றும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. பீகார் மாநிலத்தைப் பொருத்தவரைக்கும் 40 தொகுதிகள் உள்ள நிலையில் பாஜக 25 இடங்களையும் காங்கிரஸ் 15 இடங்களையும் பெறலாம் என்று முடிவு வந்திருக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT