ADVERTISEMENT

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்!! 

05:56 PM Aug 31, 2020 | kalaimohan

ADVERTISEMENT

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார். அவருக்கு வயது 84. ஆகஸ்ட் 10 ஆம் தேதி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடந்த சில நாட்களாகவே தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவருடைய உடல்நிலை குறித்த தகவல்கள் தினம் தினம் வெளியாகி வந்தது.

இந்நிலையில் தனது தந்தை பிரணாப் முகர்ஜி காலமானதாக மகன் அபிஜித் முகர்ஜி தெரிவித்துள்ளார். இந்தியாவின் 13 -ஆவது குடியரசுத் தலைவராக 2012 முதல் 2017 வரை பதவி வகித்த பிரணாப் முகர்ஜிக்கு டெல்லி ராணுவ மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலைையில் அவர் காலமானார்.

மேற்கு வங்கத்தின் மிரதி எனும் சிறிய கிராமத்தில் 1935 ஆம் ஆண்டு டிசம்பர் 11 இல் பிறந்த பிரணாப் முகர்ஜிக்கு அபிஜித், இந்திரஜித் என்ற மகன்களும், ஷர்மிதா என்ற மகளும் உள்ளனர். 50 ஆண்டு அரசியல் அனுபவம் கொண்ட பிரணாப் முகர்ஜிக்கு 2019ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT