ADVERTISEMENT

கைத்தட்டல் - காரில் பரேடு; அமைச்சரின் வணக்கத்தோடு ஓய்வுபெற்ற மோப்ப நாய்! (வீடியோ உள்ளே)

11:19 AM Feb 27, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மகாராஷ்ட்ரா மாநிலதின் நாசிக் நகர காவல்துறையின் பணியாற்றிய ஸ்பைக் என்ற மோப்ப நாய், இரண்டு நாட்களுக்கு முன்பு ஓய்வுபெற்றது. இந்த மோப்ப நாய், வெடிகுண்டுகளைக் கண்டறிதல் மற்றும் அகற்றல் பிரிவில் 11 ஆண்டுகள் சேவை செய்துள்ளது. தற்போது ஸ்பைக் ஓய்வு பெற்றுள்ளதையடுத்து, அதற்கு நாசிக் காவல்துறையினர் நெகிழ்ச்சியான பிரிவு உபச்சார விழா நடத்தியுள்ளனர்.

ஸ்பைக்கிற்கு மாலை அணிவித்து, ரோஜாக்கள் மற்றும் பலூன்களால் அலங்கரிக்கப்பட்ட காரின் வெளிப்பகுதியில் அமரவைத்து, போலீஸார் காரை ஓட்டினர். அப்போது காவல்துறையினர் இருபுறமும் நின்று கைகளைத் தட்டி, ஸ்பைக்கிற்கு மரியாதை செலுத்தினர். இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மஹாராஷ்ட்ரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், ஸ்பைக் நாட்டிற்கு ஆற்றிய சேவைக்காக, அதற்கு வணக்கம் செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அனில் தேஷ்முக், 11 வருடங்கள் சிறப்பான சேவையில், வெடிபொருட்களைக் கண்டுபிடிப்பதில் பெரும் பங்களிப்பு ஆற்றிய பிறகு ஓய்வுபெறும் 'ஸ்னிஃபர் ஸ்பைக்'-கிற்கு, நாசிக் போலீஸார், சிறப்புப் பிரிவு உபச்சார விழாவை நடத்தினர். அவர் ஒரு நாய் மட்டுமல்ல. போலீஸ் குடும்பத்தில் ஒரு அங்கமாகிவிட்டார். நாட்டிற்கு ஆற்றிய சேவைக்காக, அவருக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT