ADVERTISEMENT

டெல்லி செங்கோட்டையில் விவசாயிகள்!

03:04 PM Jan 26, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் செங்கோட்டைக்குள் நுழைந்தனர்.

ADVERTISEMENT

மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் இடைவிடாதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்தும் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர். இந்த நிலையில் குடியரசுத் தினமான இன்று (26/01/2021) டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாயிகள் அறிவித்திருந்தனர். இதற்கு டெல்லி காவல்துறையும் அனுமதி அளித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து, டிராக்டர்கள் மூலம் டெல்லிக்கு நுழைந்த விவசாயிகள் செங்கோட்டைக்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐந்து மாநில எல்லைகளில் இருந்து செங்கோட்டைக்கு விவசாயிகள் படையெடுத்து வந்தனர்.

டெல்லி செங்கோட்டையைச் சுற்றி 500-க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் விவசாயிகள் வந்துள்ளனர். பின்னர் செங்கோட்டையில் இருந்த கோபுரம் மீது சிறிய கொடிக்கம்பத்தில் விவசாயிகள் தங்கள் கொடியேற்றினர். வழக்கமாக தேசியக்கொடி ஏற்றப்படும் கம்பத்தில் பல்வேறு விவசாய சங்கங்களின் கொடிகள் ஏற்றப்பட்டன. குடியரசுத் தின அணி வகுப்பில் பங்கேற்ற வாகனங்கள் செங்கோட்டையில்தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

செங்கோட்டையில் விவசாயிகள் நுழைந்துள்ளதால் அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, டெல்லி காவல்துறையின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதாகவும், காவல்துறையின் தலைமை அலுவலகத்தைச் சுற்றிலும் விவசாயிகள் டிராக்டர்களை நிறுத்தி வைத்துள்ளதாகவும் தகவல் கூறுகின்றன.

விவசாயிகள் யாரும் சட்டத்தை கையிலெடுக்க வேண்டாம்; பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் யாரும் செயல்பட வேண்டாம் என்று விவசாயிகளுக்கு டெல்லி காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "நாட்டின் நலனுக்காக வேளாண் சட்டங்களைத் திரும்ப பெறுங்கள்; எந்த பிரச்சனைக்கும் வன்முறை தீர்வாகாது; யாராவது காயமடைந்தால் அது நாட்டுக்கும் சேதம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT