ADVERTISEMENT

ஒழுங்குமுறை கட்டமைப்புக்குள் வருகிறதா ஃபேஸ்புக், வாட்ஸ் அப்?

03:22 PM Sep 15, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

வாட்ஸ் அப், ஃபேஸ்புக் மெசஞ்சர் போன்ற செயலிகள் மூலம் இலவச வாய்ஸ் கால் மற்றும் குறுஞ்செய்தி சேவை வழங்கப்படுவதால் தங்களின் வருமானம் பாதிக்கப்படுவதாக தொலைத்தொடர்பு சேவை வழங்குபவர்களின் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துவந்தது. மேலும் இத்தகைய செயலிகளை ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கையும் தொலைதொடர்பு சேவை கூட்டமைப்பு விடுத்துவந்தன.

இதற்கு பதிலளித்துள்ள டிராய் எனும் தகவல் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், வாட்ஸ் அப், பேஸ்புக் மெசஞ்சர், ஆப்பிள் பேஸ்டைம், ஸ்கைப், டெலிகிராம், கூகுள் சாட், ஜூம் போன்ற செயலிகள் ஒழுங்குமுறை கட்டமைப்பிற்குள் கிடையாது என தெரிவித்துள்ளது.

மேலும் வாடிக்கையாளர்கள் அழைப்பை இடைமறிக்க கட்டாயப்படுத்தினால், அத்தகைய சேவைகளை வழங்கும் செயலிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிவிடும் என்றும் தெரிவித்துள்ளது. தற்போதைய சூழலில் இணையவழியில் வாய்ஸ்கால், குறுஞ்செய்தி சேவை வழங்கும் வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற செயலிகளுக்கு என்று தனியாக ஒழுங்குமுறைகளை கொண்டுவருவது தேவையற்றது என்றும் டிராய் விளக்கமளித்துள்ளது. அதேநேரம் டிராயின் இந்த அறிவிப்புக்கு தொலைதொடர்பு சேவை கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT