ADVERTISEMENT

இந்தியாவுக்கு டெஸ்லா வருவது எப்போது? எலான் மஸ்க் பதிலால் இந்தியர்கள் உற்சாகம்! 

04:11 PM Oct 05, 2020 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவில் டெஸ்லா கார்கள் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்ற கேள்விக்கு, டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் பதிலளித்துள்ளார்.

பேட்டரியைக் கொண்டு இயங்கும் டெஸ்லா கார்கள் உலகம் முழுக்க பிரபலமானது. இந்த வகை கார்கள் இந்தியாவில் இன்னும் அறிமுகம் செய்யப்படாமலேயே இருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்னால் டெஸ்லா நிறுவனம் இது தொடர்பாக மேற்கொண்ட முயற்சியானது, இந்தியாவில் உள்ள கூடுதல் வரிவிதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்கிடம் இந்தியர் ஒருவர், நாங்கள் டெஸ்லாவை விரும்புகிறோம், இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்படும், அதற்கான வேலைகள் ஏதும் நடக்கிறதா என்று சமூக வலைத்தளம் வாயிலாக கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த எலான் மஸ்க், "அடுத்த ஆண்டு உறுதியாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்" எனப் பதிவிட்டுள்ளார். எலான் மஸ்க்கின் இந்தப் பதிவானது தற்போது வைரலாகி வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT