ADVERTISEMENT

பாஜகவிலிருந்து விலகிய மூத்த தலைவர்...

04:07 PM Oct 21, 2020 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மாநில அமைச்சருமான ஏக்நாத் கட்ஸே கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

மஹாராஷ்ட்ர பாஜகவில் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஏக்நாத் கட்ஸே 30 ஆண்டுகள் அக்கட்சியின் சார்பில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்த ஏக்நாத் கட்ஸே மீது கடந்த 2016-ம் ஆண்டு நிலஅபகரிப்பு மற்றும் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து அவர் பதவி விலகினார். அதனைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வென்று பாஜக ஆட்சியை பிடிக்க முடியாத சூழலில், அதற்கு காரணம் தேவேந்திர பட்நாவிஸ்தான் என தொடர்ந்து விமர்சித்து வந்தார் ஏக்நாத்.

மேலும், பாஜக தலைவர்கள் பலர் மீதும் அவர் அதிருப்தி தெரிவித்து வந்தார். இந்த சூழலில், பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் ஏக்நாத். இதனிடையே, வரும் வெள்ளிக்கிழமை சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸில் கட்ஸே இணையவுள்ளார் என அக்கட்சியின் ஜெயந்தி பாட்டில் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கட்சியில் இருந்து விலகியது குறித்து பேசியுள்ள ஏக்நாத் கட்ஸே, தேவேந்திர பட்னாவிஸ் தனது வாழ்வையே கெடுத்துவிட்டதாக சாடியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT