ADVERTISEMENT

மிசோரத்தில் நில அதிர்வு!

08:48 AM Jan 05, 2024 | prabukumar@nak…

ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் கடந்த 1 ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம் ஹோன்சு பகுதி அருகே அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கமாக ஏற்பட்டது. இதனால், வீடுகள் குலுங்கியதால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். 150க்கும் மேற்பட்ட முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 62 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டன.

ADVERTISEMENT

அதே சமயம் கடந்த சில நாட்களாக ரஷ்யா, மியான்மர், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த சூழலில் நேற்று (04-01- 2024) நள்ளிரவு 12:38 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. பூமிக்கு அடியில் 5 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.9 புள்ளிகளாகப் பதிவாகி உள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்திருந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தால் எந்தவொரு உயிர்ச்சேதமோ பொருட்சேதமோ ஏற்படவில்லை என்ற தகவலும் வெளியாகியிருந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரம் மாநிலத்தின் லங்லை என்ற பகுதியில் இன்று (05.01.2024) அதிகாலை 3.5 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நில அதிர்வானது பூமிக்கு அடியில் 5 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT