afghanistan

Advertisment

ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், அந்த நாட்டில் ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் ஜனநாயக ஆட்சி நடைபெறாதுஎனவும் தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

இதற்கிடையே கடந்த 17ஆம் தேதிகாலை 6.08மணியளவில், ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

இந்தநிலையில், இன்று (19.08.2021) காலை 11.22 மணியளவில் ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால்ஏற்பட்ட பாதிப்பு குறித்தும் எந்தத் தகவலும் வெளியாகவில்லை.