ADVERTISEMENT

எந்த கட்சிக்கு ஓட்டு போட்டீங்க கண்டுபிடிக்க அரசியல் கட்சியின் புது டெக்னீக்! மக்கள் அதிர்ச்சி!

01:53 PM Apr 30, 2019 | Anonymous (not verified)

இந்திய முழுவதும் பாராளுமன்ற தேர்தல் பல்வேறு கட்டமாக நடந்துவருகிறது.இந்த நிலையில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு ஒன்பது மாநிலங்களில் 72 தொகுதிகளுக்கு நேற்று நடைபெற்றது.அதில் மேற்கு வங்காளத்தில் வாக்கு பதிவின் போது தங்கள் கட்சியினருக்கு தான் வாக்காளர்கள் வாக்களிக்கிறார்களா என்று அறிய புதிய திரிணாமூல் காங்கிரஸ் கட்சி புதிய யுத்தியை கையாண்டுள்ளது குறித்து அம்மாநில பத்திரிகை அனந்தபசார் செய்தி வெளியிட்டுள்ளது.வாக்கு இயந்திரத்திலுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சின்னத்தில் வாசனை திரவியத்தை கட்சியினர் தெளித்து வைத்திருந்தனர்.

ADVERTISEMENT



வாக்களித்து விட்டு வெளியே வரும் வாக்காளர்களின் விரலை நுகர்ந்து விரலில் வாசனை வருகிறதா என சோதனை செய்தனர்.இதன் மூலம் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்ததை உறுதி செய்தனர் என செய்தியில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து பா.ஜ.க. மூத்த தலைவர் ஷிஷிர் பஜோரா கூறுகையில் மக்களால் புறக்கணிக்கப்படுவோம் என முன்கூட்டியே அறிந்த திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சியினர் இதுபோல் எந்த எல்லைக்கு செல்வர் என்றார். தேர்தலில் அரசியல் கட்சியினர் ஓட்டு வாங்குவதற்கு எந்த எல்லைக்கும் செல்வார்கள் அதுக்காக எதுவேண்டுமானாலும் செய்வார்கள் என்பதற்கு இதுபோன்ற செயல்கள் ஒரு உதாரணம் என்று அப்பகுதி மக்கள் கூறிவருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT