வங்கதேச நடிகர் பெர்டோஸ் அகமது திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கென்கையாலால் அகர்வாலுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தியாவின் சட்டங்களை மீறி வங்கதேச நடிகர் இந்தியாவிற்குள் வந்து பிரச்சாரம் மேற்கொண்டது சர்ச்சையானது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் திரிணாமூல்காங்கிரஸ் மீது குற்றம் சாட்டின.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இதனை தொடர்ந்து வெளிநாட்டு நடிகர் பிரசாரம் செய்தது தொடர்பாக மத்திய அரசு அறிக்கையை கோரியுள்ளது. விசா நடைமுறைகளை பெர்டோஸ் அகமது மீறியுள்ளாரா என்பது தொடர்பாக ஆய்வு செய்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுங்கள் என கொல்கத்தா வெளிநாட்டு பிராந்திய பதிவு அலுவலகத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.