ADVERTISEMENT

'ஏசியை 17 டிகிரி செல்சியஸில் பயன்படுத்தாதீர்'-'மிஷன் லைஃப்' தொடக்க நிகழ்வில் மோடி அட்வைஸ்

11:34 PM Oct 20, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்தில் 'மிஷன் லைஃப்' எனும் சர்வதேச செயல் திட்டத்தை பிரதமர் மோடி முன்னெடுத்துள்ளார். குஜராத்தின் கோவாடியாவில் இன்று நடைபெற்ற விழாவில் ஐ.நா பொதுச் செயலாளர் குட்டரெஸ் கலந்து கொண்ட நிலையில், அவருடன் இணைந்து இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.

இந்த நிகழ்வின் மேடையில் பேசிய பிரதமர் மோடி, ''பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள 'மிஷன் லைஃப்' திட்டம் கைகொடுக்கும். உலகம் முழுவதும் பருவநிலை மாற்றம் என்பது பெரும் சவாலான ஒன்றாக உருவெடுத்துள்ளது. இதனை எதிர்கொள்ள இத்திட்டம் கை கொடுக்கும். சிலர் வீடுகளில் ஏசியின் வெப்பநிலையை 17 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வைக்கின்றனர். இது சுற்றுச்சூழலில் பாதகமான எதிர் வினைகளை கண்டிப்பாக ஏற்படுத்தும்' என்றார்.

அதனைத் தொடர்ந்து பேசிய ஐநா பொதுச் செயலாளர் குட்டரெஸ், ''பருவநிலை மாற்றத்தில் இருந்து உலகை பாதுகாக்க ஒருமித்த பங்களிப்பு நமக்குள் அவசியம்'' என்றார். இந்த நிகழ்ச்சியில் பிரான்ஸ், மாலத்தீவு, மடகாஸ்கர் போன்ற நாடுகளின் அதிபர்களும், பிரிட்டன், ஜார்ஜியா, எஸ்டோனியா உள்ளிட்ட நாடுகளின் பிரதமர்களும் காணொளி வாயிலாக கலந்து கொண்டனர். அதன்பின் குஜராத்தின் வியாரா என்ற இடத்தில் 1,970 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT